ஹிட்லரின் தளபதிக்கு பதிலாக சிறையில் ஆள்மாறாட்டம் நடந்ததா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஹிட்லரின் தளபதிக்கு பதிலாக சிறையில் ஆள்மாறாட்டம் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஆஸ்திரிய விஞ்​ஞா​னி​கள் நடத்திய டிஎன்ஏ சோதனையில் தெரியவந்துள்ளது.

டிஎன்ஏ சோதனையில், பெர்லினில் உள்ள ஸ்பான்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தது ஹிட்லரின் நம்பிக்கைக்கு உரியவரும், நாஜி கட்சியின் முக்கிய தலைவருமான ரூடால்ப் ஹெஸ்தான் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 1942-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு தப்பிச்சென்றபோது கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 1987-இல் தனது 93-வது வயதில் பெர்லின் சிறையில் தூக்கிலிடப்பட்டு இறந்த நிலையில் இவர் கண்டெடுக்கப்பட்டார்.

ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மறைந்த ஹெஸ்ஸின் உறவினர் ஒருவரின் டிஎன்ஏ மாதிரியை வைத்து சோதனை நடத்தியுள்ளனர்.

இம்மாதிரியும், 1982-ஆம் ஆண்டு ஸ்பான்டா சிறையில் கைதி எண் 7 என அடையாளத்துடன் இருந்த நபரின் ரத்த மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டு சோதனைகள் நடந்தன.

இந்த சோதனைகளின் முடிவில் இவை இரண்டும் ஒரேமாதிரியாக இருந்ததும், சிறையில் இருந்தது ரூடால்ப் ஹெஸ்தான் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers