ஜேர்மன் இளம்பெண் வன்புணர்வு, கொலை வழக்கு: குற்றவாளி அளித்த வாக்குமூலம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் இளம்பெண் சூசன்னாவை வன்புணர்வு செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஈராக் அகதியான அலி பஷார் (22) வாக்குமூலம் அளித்துள்ளான்.

ஜேர்மனியைச் சேர்ந்த சூசன்னா பெல்ட்மேன் (14) என்னும் இளம்பெண் ஒரு நாள் திடீரென காணாமல் போனாள்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு அகதிகள் முகாமிலிருந்த 13 வயது ஆப்கன் அகதி ஒருவன் கொடுத்த தகவலின்பேரில் சூசன்னா ரயில் பாதை ஒன்றின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டாள்.

அதற்குள் அவளைக் கொலை செய்த அலி, ஈராக்குக்கு தப்பியோடியிருந்தான். பின்னர் குர்திஷ் படைகளிடம் சிக்கிய அவன் ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டான். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

AFP/GETTY IMAGES

இந்நிலையில் அலி நேற்று வாக்குமூலம் அளித்தான். அதில் தான் சூசன்னாவைக் கொலை செய்தது உண்மைதான் என்றும், தான் போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததால், அது எப்படி நடந்தது என்பதே தனக்கு தெரியவில்லை என்றும் கூறினான் அவன்.

ஆனால் தான் சூசன்னாவை பாலியல் வன்புணர்வு செய்யவில்லை என்றும், விருப்பத்தின் பேரிலேயே தாங்கள் இருவரும் பாலுறவு கொண்டதாகவும் கூறியுள்ளான் அவன்.

வழக்கு தொடரும் நிலையில், அலி தண்டிக்கப்பட்டால், தனது தண்டனைக் காலத்தில் பாதியை ஜேர்மனியில் கழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்