ஜேர்மன் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் மௌனம் காக்கும் துருக்கி அரசு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

மூன்று ஜேர்ம்ன் பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு துருக்கி அரசு வெளியேற்றும் விவகாரத்தில் ஜேர்மன் வெளியுறவு துறை பேச்சுவார்த்தை நடத்தியபோதும் துருக்கி மௌனம் காத்து வருவதாக ஜேர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜூலை 2016 ல் தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு அரசாங்கம் முக்கிய காரணமாக குற்றம்சாட்டியது பத்திரிகையாளர்களையே. இதனால் தான் துருக்கி நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில் தான் இரண்டு ஜேர்மன் பத்திரிகையாளர்களின் பணி நீட்டிப்பு அட்டையை புதுப்பித்து கொடுக்க துருக்கி அரசு மறுத்துவிட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் திரும்பி நாட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக துருக்கி அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது. காரணங்கள் ஏதுமின்றி துருக்கி இவ்வாறு முடிவெடுத்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளது.

துருக்கியின் பொருளாதாரம் நெருக்கடி மற்றும் ஜேர்மனியில் துருக்கிய பொருளாதாரத்துடன் நெருக்கமான சரிவைத் தவிர்ப்பதற்கு இரு தரப்பும் ஆர்வமாக உள்ளன. இந்த விவகாரத்தால் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்