அகதிகளுக்காக பணம் செலவிட்டதில் ஜேர்மனி சாதனை.. இத்தனை பில்லியனா?

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனி அரசாங்கம் கடந்த ஆண்டு அகதிகளுக்காக 23 பில்லியன் யூரோக்களை செலவிட்டு சாதனை படைத்துள்ளது.

இது அதற்கு முந்தைய ஆண்டு செலவிட்ட 20.8 பில்லியன் யூரோக்களை விட 11 சதவீதம் கூடுதல் என அந்நாட்டு நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜேர்மனி, ஒரு மில்லியன் அகதிகளை ஒருங்கிணைக்க உதவியதுடன், வெளிநாட்டில் குடியேற்றத்தின் அடிப்படை காரணங்களை எதிர்த்துப் போராட உதவி செய்துள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதானமாக முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் நூறாயிரக்கணக்கான அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜேர்மன் எல்லைகளை திறந்துவிட 2015 ஆம் ஆண்டு முதல் ஆதரவு அளித்து வந்து ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், நாட்டில் அதிகரித்த அகதிகளால் நிலைமையை சமாளிக்க முடியாத நிலையில் தான் அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றார்.

இதனையடுத்து, அகதிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே குடியேற்றுவதற்கும், அவர்களின் சொந்த நாட்டிலேயே வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காகவும் 2018 ஆம் ஆண்டில் ஜேர்மனி அரசாங்கம் மொத்தம் 7.9 பில்லியன் யூரோக்களை செலவு செய்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 16 சதவீதம் கூடுதல் ஆகும்.

அகதிகளுக்கு செலவிடுவதற்காக கடந்த ஆண்டு கூட்டாட்சி அரசாங்கத்திடமிருந்து 7.5 பில்லியன் யூரோக்களை ஜேர்மனி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனினும், அகதிகளுக்காக ஜேர்மனி அரசாங்கம் பல பில்லியன்களை செலவிடுவதை அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்