ஜேர்மனியில் 500 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிப்பு! 16 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் 2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ வெடிக்காத வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 16,500 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா, பிரித்தானியா விமானப்படைகள் 27 லட்சம் டன் வெடிகுண்டுகளை ஐரோப்பாவில் வீசின.

இவற்றில் பல வெடிக்காத வெடிகுண்டுகள், ஜேர்மனியின் பல இடங்களில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 2,000க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் ஜேர்மனியில் இன்னும் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிராங்க்பர்ட் நகரில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைமையகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வரும்போது, 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

IC

இதனை செயலிழப்பு செய்வதற்காக ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில், கட்டிடங்களில் வசிக்கும் சுமார் 16,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

2ஆம் உலகப் போர் முடிந்து 70 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ரோஜென்ஸ்பர்க் பகுதியில் 250 கிலோ எடையுள்ள வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், அதை செயலிழக்க செய்யும்போது அந்த குண்டு பயங்கரமாக வெடித்தது. இதனால் அருகில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

AP Photo / MANILA BULLETIN

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...