ஜேர்மனியில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 14 மற்றும் 12 வயது சிறுவர்கள்! பொலிசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பதின்ம வயதுடைய 5 சிறுவர்களை பொலிசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.

Ruhr பிராந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மூன்று 14 வயது சிறுவர்கள் மற்றும் இரண்டு 12 வயது சிறுவர்களை பொலிசார் கைது செய்தனர்.

அப்பகுதியில் உள்ளூர்வாசிகள் சிலர், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை கண்டுபிடிப்பதற்காக, தங்கள் தோட்டத்தின் பின்னால் ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு, தங்களின் நாயை பின்தொடர்ந்ததாக தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் தகவல் அறிந்து வந்த பொலிசார், குறித்த ஐந்து சிறுவர்கள் மற்றும் ஒரு பெண்ணை கண்டுபிடித்தனர். பின்னர் அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

ஜேர்மனிய சட்டத்தின்படி 12 வயது சிறுவர்களின் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது என்பதால், ஐவரில் 12 வயது சிறுவர்கள் இருவர் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால், அவர்கள் விடுவிப்பதற்கு முந்தைய நாள் இரவு பொலிஸ் காவலில் இருந்தனர். பின்னர், மீதமுள்ள 14 வயதுடைய சிறுவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கினர். அவர்களில் ஒரு சிறுவன் மீதான முந்தைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முன்கூட்டியே சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில், ஜூலை 15ஆம் திகதி வரை குறித்த ஐந்து சிறுவர்களும் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்