ஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நெடுஞ்சாலை ஒன்றில் 140 கிலோமீற்றர் வேகத்தில் கார் ஒன்று செல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து அந்த காரைத் தேடி சென்ற பொலிசார் காரின் சாரதியைக் கண்டு வியந்தனர்.

காரணம் அந்த காரை மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டிச் சென்றவர் ஒரு ஒரு எட்டு வயது சிறுவன்.

பொலிசார் சாரதியைக் கண்டு அதிர, அந்த ’சாரதியோ’ பொலிசாரைக் கண்டதும் பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டார்!

உண்மையில் வீட்டில் காரைக் காணாமல் அந்த சிறுவனின் தாயார்தான் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

அதன்படி காரைத் தேடிச் சென்ற பொலிசார், நெடுஞ்சாலை ஓரத்தில் எச்சரிக்கை விளக்குகள் எரிய, காரின் பின்புறம் அபாய முக்கோணம் ஒன்றும் வைக்கப்பட்ட நிலையில் காரைக் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுவர்களுக்கான பந்தயக் கார்களை ஓட்டும் வழக்கம் கொண்ட அந்த சிறுவன், பொலிசாரைக் கண்டதும் அழுதுகொண்டே, சிறிது கார் ஓட்ட ஆசைப்பட்டேன், அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறான்.

எட்டு கிலோமீற்றர் தூரம் சென்றதும், சிறுவனுக்கு உடல்நலமில்லாததுபோல் தோன்ற, காரை நிறுத்தியிருக்கிறான் அவன்.

அவனது இந்த செயலால், அவனது காருக்கோ, வேறு வாகனங்களுக்கோ, அல்லது நபர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers