பரோட்டா பீப் செய்ததற்காக கேரள மக்களை எதிர்த்து வட இந்தியர்கள் போராட்டம்: ஜேர்மனி பொலிஸின் சவுக்கடி

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்திய விழாவில், பரோட்டா பீப்(beef) வழங்கியதற்காக சில வட இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

பிராங்க்புர்ட்டில் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்திய திருவிழாவில், பரோட்டா பீப் வழங்கியதற்காக சர்ச்சையை ஏற்படுத்திய சில வட இந்தியர்கள், கேரள சமாஜத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவிழாவின் உணவுப்பட்டியலில் பரோட்டா மற்றும் பீப்பை வட இந்தியர்கள் கவனித்தபோது பிரச்னை தொடங்கியது. விரைவில், பல வட இந்தியர்கள் கூடி, பீப் கடையை மூடுமாறு கோரினர். அவர்கள், கேரள சமாஜத்தின் கடையை மூடுமாறு இந்திய தூதரகத்தை கட்டாயப்படுத்தினர்.

இருப்பினும், பல உணவு ஆர்வலர்கள் தலையிட்டு இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவயிடத்தை அடைந்த ஜேர்மனி பொலிசார், ஜேர்மனி யாரையும் அவர்கள் விரும்புவதை சாப்பிடுவதை தடை செய்யவில்லை என்று கூறினார்.

beef-porotta
Getty images

பீப் நுகர்வுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் நடத்த இது தங்கள் நாடு அல்ல என்றும் அவர்கள் போராட்டக்காரர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, எதிர்ப்பாளர்கள் கலைந்து சென்றனர். வட இந்தியர்களின் உணவு எதிர்ப்பை கண்டித்து கேரள சமாஜத்தை சேர்ந்தவர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Malayalis in Germany told to remove beef from menu at Indian fest, stage silent protest
Facebook

ஜேர்மனியில் உள்ள மலையாள சமூகம் இந்த சம்பவம் தொடர்பாக வட இந்தியர்களுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளது. பல சமூக ஊடக பயனர்கள் இந்த பிரச்னையை உணவு சுதந்திரத்திற்கு எதிரான படையெடுப்பாக எடுத்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers