உடற்குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது அதிகரிப்பு: விசாரணையில் இறங்கியுள்ள ஜேர்மன் அரசு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

மேற்கு ஜேர்மனியில் குழந்தைகள் உடற்குறைபாடுகளுடன் பிறப்பது அதிகரித்துள்ளதையடுத்து, அதிகாரிகள் அது தொடர்பான விசாரணையில் இறங்க முடிவு செய்துள்ளனர்.

Dortmundக்கு அருகிலுள்ள Gelsenkirchenஇலுள்ள மருத்துவமனை ஒன்றில் மூன்று குழந்தைகள் ஒரு கையில் உள்ளங்கைகளும் விரல்களும் சரியாக வளர்ச்சியடையாத நிலையில் பிறந்துள்ளன.

இதுபோன்ற குறைபாடுகளை முந்தைய ஆண்டுகளில் கண்டதில்லை என்று கூறும் மருத்துவமனை ஒன்றின் அறிக்கை, சமீப காலமாக தொடர்ந்து குறுகிய காலகட்டத்தில் இதுபோன்று உடற்குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிறந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தாருக்கும் எவ்விதத்திலும், எந்த உறவோ, தொடர்போ இல்லை என்றும், அவர்களுக்குள் உள்ள ஒரே ஒற்றுமை, அவர்கள் ஒரே இடத்தில் வசிப்பதுதான் என்றும் கூறியுள்ளது அந்த மருத்துவமனை.

இந்த பிரச்னையை முதலில் வெளிக்கொணர்ந்த தாதியான Sonja Ligget-Igelmund, இந்த விடயம் வெளியில் தெரியவந்ததைத் தொடர்ந்து, குறைந்தது 30 குழந்தைகளாவது இதே பிரச்னைகளுடன் பிறந்திருக்கலாம் என்ற தகவல் தனக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை என்றாலும், அவற்றை சீரியஸாக எடுத்துக்கொண்டு விசாரணையில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்