கமெராக்கள் எங்களை தவறான கோணத்தில் படம்பிடிக்கின்றன: ஜேர்மன் ஓட்டப்பந்தய வீராங்கனைகள் புகார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஓட்டப்பந்தய வீராங்கனைகள் ஓடத்துவங்கும் அந்த கணத்தை பதிவு செய்வதற்காக புதிய கமெராக்கள் ஓட்டப்பந்தயம் தொடங்கும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அவை தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக ஜேர்மன் வீராங்கனைகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த கமெராக்களை தாண்டிதான் நாங்கள் ஓட்டத்தை துவங்க வேண்டியுள்ளது. அப்படி அதை தாண்டி ஓடும்போது அவை எங்கள் உடலை தவறான கோணத்தில் படம் பிடிக்கின்றன என்கிறார்கள் அவர்கள்.

Gina Lückenkemper என்னும் ஜேர்மன் வீராங்கனை கூறும்போது, இந்த கமெராவை உருவாக்குவதில் ஒரு பெண் பங்கேற்றிருப்பாரா?, இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஏற்கனவே நாங்கள் மிகக்குறைவாக ஒரு துணியை, உடை என்ற பெயரில் போட்டுக்கொண்டு ஓடுகிறோம், அதில் இந்த கமெராக்களை தாண்டி ஓடுவதற்கு அசௌகரியமாக உள்ளது என்கிறார் அவர்.

வீராங்கனைகளின் புகாரையடுத்து ஜேர்மன் விளையாட்டுத்துறை அதிகாரிகள், வீராங்கனைகள் ஓடத்தொடங்கியபின் ஒரு முறை மட்டுமே அவை ஒளிபரப்பப்படவேண்டும் என்று கோரியுள்ளனர்.

அத்துடன், கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அன்றன்றே அழிக்கப்பட்டுவிடும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்