ஜேர்மனியில் அதிரடியாக மூடப்பட்ட முக்கிய விமான நிலையம்: விமானத்தில் சிறை வைக்கப்பட்ட பயணிகள்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான ஹாம்பர்க் விமான நிலையம் திடீரென்று மூடப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் முதன்மை விமான நிலையங்களில் ஒன்றான ஹாம்பர்க் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்பு கருதி, குறித்த விமான நிலையத்தை மூடியதுடன், எந்த விமானமும் தரையிறங்கவோ இங்கிருந்து கிளம்பவோ அனுமதி மறுக்கப்பட்டது.

மட்டுமின்றி, புறப்பட தயாரான நிலையில் இருந்த விமானங்கள் அனைத்தில் இருந்தும் பயணிகளையும் வெளியேற அனுமதி மறுத்தனர்.

இதனால் குறித்த விமானங்களில் பயணிகள் சிறை வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

சூழ்நிலையை ஆராய்ந்து வருவதாகவும், முன் பதிவு மேற்கொண்ட பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

(Image: Ian Cooper/North Wales Live)

பலரும் தங்களுக்கு உரிய தகவலை அளிக்க நிர்வாகம் மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

ஹாம்பர்க் விமான நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்ட அந்த குண்டின் எடை சுமார் 450 கிலோ என தெரியவந்துள்ளது.

தற்போது அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கைளானது முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாம்பர்க் நகரில் இது முதன்முறை அல்ல வெடிகுண்டு கண்டெடுக்கப்படுவது. உலகப் போர் முடிவுக்கு வந்து சுமார் 75 ஆண்டுகள் கடந்த நிலையில்,

(Image: Alamy Live News.)

கடந்த மே மாதம் அமெரிக்க தயாரிப்பான 1000 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்றையும் கண்டெடுத்தனர்.

இதனையடுத்து சுமார் 6,000 பொதுமக்களை அப்பகுதியில் இருந்து பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தினர்.

1943 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆபரேஷன் கோமோரா தாக்குதலில் ஹாம்பர்க் நகரில் மட்டும் சுமார் 34,000 முதல் 43,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

(Image: Alamy Live News.)
(Image: Alamy Live News.)

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்