பெர்லினில் ஒரு தொலைபேசி அழைப்பு போதும்: வீட்டுக்கே வரும் போதை டாக்சிகள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லினில் ஒரு தொலைபேசி அழைப்பு போதும், வீட்டுக்கே போதைப்பொருட்களை கொண்டு வரும் டாக்சிகள், ஜேர்மனி எந்த அளவுக்கு மோசமாகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

இந்த ஆண்டு மே மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடையில் மட்டும், டாக்சியில் கொண்டு சென்று கொக்கைன் என்னும் போதைப்பொருளை சப்ளை செய்யும் 35 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார்கள் பெர்லின் பொலிசார். 2018இல் கொக்கைன் டாக்சி வழக்குகள் 11 பதிவு செய்யப்பட்டன.

இது எந்த அளவுக்கு போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுவதோடு, பெர்லினில் எவ்வளவு எளிதாக போதைப்பொருள் வாங்கமுடியும் என்பதையும் காட்டுகிறது.

கொக்கைன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், தொலைபேசியில் அழைத்து ஒரு டாக்சியை புக் செய்கிறார்கள்.

Photo: DPA

அந்த அழைப்பு இன்னொரு கால் சென்டருக்கு இணைக்கப்படுகிறது. 15 முதல் 30 நிமிடங்களில் குறிப்பிட்ட முகவரிக்கு பொருள் வந்துவிட்டதாக வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி ஒன்று வருகிறது. வாடிக்கையாளர் காருக்குள் ஏறி பணத்தைக் கொடுத்துவிட்டு போதைப்பொருளை வாங்கிக் கொள்ளவேண்டியதுதான்.

Michael என்னு ஒருவர், இது பீட்சா ஆர்டர் செய்வது போல் எளிதாக உள்ளதால், தவறு செய்வதாக தோன்றவே இல்லை என்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்துக்குமேல் அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகிப்போக, அவரது காதலி அவரை போதை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கான சிகிச்சை மையத்தில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை மறுக்கமுடியாது.

வாடிக்கையாளர்களுக்கு சிறிய அளவில் போதைப்பொருள் சப்ளை செய்யும் அதே நேரத்தில், இதே பெர்லினில், இன்னொரு பக்கம் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களும் நடக்கின்றன.

மே மாதம், பொலிசார் காரில் போதை கடத்தும் இருவரை பிடித்தபோது, அவர்களிடமிருந்து 40,000 யூரோக்கள் மதிப்புடைய ஒரு கிலோ கொக்கைன் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்