உலக வரலாற்றில் மிகப்பெரிய அருங்காட்சியக கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனி அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற வைரங்கள், மாணிக்கங்கள் மற்றும் மரகதங்கள் திருடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றில் மிகப்பெரிய அருங்காட்சியக திருட்டு இது என்று கூறப்படுகிறது.

கிரீன் வால்ட் அருங்காட்சியகத்தில் இருந்து பல பில்லியன் யூரோ வரை மதிப்புள்ள நகைகள் மற்றும் பொக்கிஷங்கள் திருடப்பட்டன.

இக்கொள்ளை சம்பவம் தொடர்பில் இரண்டு நபர்களை தேடி வருவதாகவும், ஆனால், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் பலர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 18 ஆம் நூற்றாண்டின் மூன்று விலைமதிப்பற்ற வைரங்கள், ரூபி மற்றும் மரகத நகைகளை திருடர்கள் திருடிவிட்டதாக பொலிஸ் மற்றும் அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் திருடர்கள் ஜன்னல் வழியாக நுழைவதைக் காண்பிக்கின்றன, பின்னர், டார்ச்லைட் உடன் அருங்காட்சியகத்திற்குள் முகமூடியுடன் நுழைந்த கொள்ளையர்கள் கண்ணாடியை உடைத்து, பொருட்களை எடுத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே சென்று தப்பி ஓடியுள்ளனர்.

இதே சமயத்தில் நகர மையத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகளுக்கும் இக்கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஐரோப்பாவின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தில் ஒன்றான கிரீன் வால்ட்டிற்கு புலனாய்வாளர்கள் சீல் வைத்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்