ஜேர்மன் விடுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய மாணவி!

Report Print Abisha in ஜேர்மனி

ஜேர்மன் பல்கலை கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவி சடலமான நிலையில், விடுதி அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Frankfurt பல்கலைகழகத்தில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த அனிலா என்ற மாணவி விடுதி அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 27வயதான அனிலா டிசம்பர் 7ஆம் திகதி பெற்றோருடன் பேசியுள்ளார். அதன்பின் அவர் அழைப்புகளை ஏற்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், தற்போது அவரது இறப்பு குறித்து பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக அனிலா, கொச்சின் பல்கலைகழகத்தில் பணியாற்றியவர் ஆவார். 2017ஆம் ஆண்டு மேல்படிப்பிற்காக ஜேர்மன் வந்துள்ளார். கடந்த ஆண்டில், விடுமுறைக்காக சொந்த ஊர் சென்று வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்