இதுவரை இல்லாத அளவில் ஜேர்மானிய குடிமக்களாக மாறும் ஏராளம் பிரித்தானியர்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

2003க்குப்பின் 2019இல்தான் இத்தனை பிரித்தானியர்கள் ஜேர்மானிய குடியுரிமை பெற்றுள்ளார்கள்.

ஜேர்மானிய குடியுரிமை பெற்றுள்ளோரின் எண்ணிக்கை 2019இல் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அவர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியாவிலிருந்து வருபவர்கள். 2019இல் ஜேர்மன் குடியுரிமை பெற்ற 128,900 பேரில் 14,600 பேர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள்.

துருக்கியிலிருந்து வந்தவர்கள் 16,200 பேர், போலந்திலிருந்து 6,000 பேர் ரொமேனியாவிலிருந்து 5,800 பேர்.

பிரெக்சிட் வாக்கெடுப்பு முடிந்ததும்தானே ஜேர்மானியர்களாக மாறும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 2015இல் வெறும் 600 பிரித்தானியர்கள்தான் ஜேர்மானிய குடிமக்களாகியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் ஜேர்மானியர்களானதற்கு பிரெக்சிட்தான் காரணம் என யாரும் கூறவில்லை என்பதுடன், அவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மனியில்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், பெரும்பாலான பிரித்தானிய ஜேர்மானியர்கள் தங்கள் பிரித்தானிய குடியுரிமையையும் விட்டுவிடவில்லை என்பதுதான்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்