160 நாடுகளுக்கு பயண எச்சரிக்கையை நீட்டித்தது ஜேர்மனி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் அரசாங்கம் 160 நாடுகளுக்கு ஆகத்து மாதம் இறுதிவரை பயண எச்சரிக்கையை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த பட்டியலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இல்லை! கொரோனா வைரஸ் அச்சம் இன்னமும் தொடர்வதால், அந்த நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற சுற்றுலாப்பயணங்களை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சில நாடுகளுக்கு மட்டும் விதிவிலக்களிக்க ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளில் ஜேர்மானியர்கள் சுற்றுலா செல்ல மிகவும் விரும்பும் இடங்களில் ஒன்றான துருக்கியும் அடக்கம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்