அறை முழுவதும் பிரித்தானிய இளம்பெண்கள்... நிர்வாணமாக அறைக்குள் நுழைந்த நபர் செய்த மோசமான செயல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.

புகைப்படங்களிலும் சரி, வெளியான வீடியோ ஒன்றிலும் சரி 100 சதவிகிதம் சாதாரணமான, அப்பாவியாக காட்சியளிக்கும் Christian Brueckner (43), பல குற்றச்செயல்களில் தொடர்புடையவன் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, தான் செய்த குற்றங்கள் குறித்து பெருமையடித்துக்கொள்வது Bruecknerஇன் வழக்கம்.

சொல்லப்போனால், தவளை தன் வாயால் கெடும் என்பது போல, பிரித்தானியச் சிறுமி மேட்லின் வழக்கில் பல ஆண்டுகளாக எந்த துப்பும் கிடைக்காமல் மூன்று நாட்டு பொலிசார் திணறிக்கொண்டிருந்த நிலையில், தனது நண்பர் ஒருவரிடம் மேட்லின் குறித்த அத்தனை விடயங்களும் தனக்குத் தெரியும் என Brueckner உளறியிருக்கிறான்.

அந்த நண்பர் பொலிசாருக்கு தகவல் கொடுக்க, அதன் பிறகுதான் பொலிசாரின் கவனம் Brueckner பக்கம் திரும்பியது.

இந்நிலையில், சுமார் ஏழு குழந்தைகள் மாயமான அல்லது கொல்லப்பட்ட வழக்குகளில் Bruecknerக்கு தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

எப்போதோ தெரியாமல் சிலர் குற்றச்செயலில் ஈடுபட்டுவிடுவதுண்டு.

ஆனால், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதையே வாடிக்கையாக Brueckner, தனது செயல்களுக்காக கொஞ்சமும் வருந்தாமல், தான் செய்த செயல்கள் குறித்து ஜம்பமடித்துக்கொண்டுள்ளான்.

ஒரு முறை, போர்ச்சுகல்லில் ஒரு அறை முழுவதும் சுற்றுலா வந்த ஒரு கூட்டம் பிரித்தானிய இளம்பெண்கள் தூங்கிக்கொண்டிருக்க, நிர்வாணமாக அந்த அறைக்குள் நுழைந்த Brueckner, அந்த அறையிலேயே மோசமான செயலில் ஈடுபட்டுள்ளான்.

அப்போது தூங்கிக்கொண்டிருந்த ஒரு பெண் தற்செயலாக விழித்துக்கொள்ள, மற்ற பெண்களை எழுப்பியுள்ளாள்.

உடனே அங்கிருந்து தப்பியுள்ளான் Brueckner. இந்த விடயத்தையும் அந்த பெண்கள் கூறவில்லை. Brueckner தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் வழக்கம்போல, இந்த விடயம் குறித்து பெருமையடித்துக்கொண்டதில்தான் இந்த விடயமும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்