அந்த செவிலியர் என் அருகில் வந்தால் ஜன்னலிலிருந்து குதித்துவிடுவேன்... மிரட்டிய நோயாளி: வெளியான உண்மை முகம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நோயாளி ஒருவர், அந்த செவிலியர் என் அருகில் வந்தால் ஜன்னலிலிருந்து குதித்துவிடுவேன் என்று தன் உறவினர்களிடம் கூற, அந்த செவிலியர் மீது சந்தேகம் ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்கள் அவர்கள்.

மற்றொரு நோயாளி தனது வீட்டில் வேலை செய்யும் மரியா என்ற பெண்ணிடம், அந்த ஆள் மோசமானவன் என்று கூறியுள்ளார்.

சிறிது நாட்களுக்குப் பின் அவர் இறந்துபோனார். பின்னர்தான் அந்த செவிலியரின் உண்மை முகம் வெளியே தெரியவந்தது. அந்த செவிலியரின் பெயர் Grzegorz Stanislaw W., (38).

செவிலியர் வேலை பிடிக்காமலே அந்த வேலையில் சேர்ந்துள்ளார் அவர். தான் செய்த தவறுகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக ஒருவரை கொலை செய்துள்ளார் அவர். தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதை பயன்படுத்தி, தன்னிடம் இருந்த இன்சுலினை அளவுக்கு அதிகமாக செலுத்தி மூவரைக் கொலை செய்துள்ளார் அவர்.

உண்மையில் ஆறு பேரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், மூன்று பேரைக் கொன்றதற்குத்தான் ஆதாரம் உள்ளது.

எனவே, தற்போது Stanislawவுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது பேச மறுத்த Stanislaw, தீர்ப்பைக் கேட்டதும், தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். நான் செய்தது மிகக் கொடூரமான விடயம், அதை மாற்ற முடியாது என்றார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்