சுவிட்சர்லாந்து உட்பட இந்த 4 நாடுகளும் ஆபத்தான பகுதிகள்! நாட்டு மக்களுக்கு ஜேர்மனி முக்கிய எச்சரிக்கை

Report Print Basu in ஜேர்மனி

சுவிட்சர்லாந்து, ஐயர்லாந்து, போலந்து மற்றும் ஆஸ்திரியாவின் பெரும்பாலான பகுதிகளை ஆபத்தான பகுதிகளாக ஜேர்மனி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, போலந்து மற்றும் ஆஸ்திரியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என நாட்டு மக்களுக்கு ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கைகள் அக்டோபர் 24ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தொற்று நோய்களுக்கான ஜேர்மனியின் ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) தெரிவித்துள்ளது.

இந்த பயண எச்சரிக்கை ஆல்பைன் நாடுகளின் குளிர்கால சுற்றுலாத் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆஸ்திரியாவின் கரிந்தியா மாகாணத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளைப் போலவே, இந்த நாடுகளிலும் சமீபத்திய வாரங்களில் புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதால் ஜேர்மனி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்