ஜேர்மனியில் கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் நிலையில் அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் நாட்டு மக்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பிற ஐரோப்பிய நாடுகளைப் போல ஜேர்மனி கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்படவில்லை என்றாலும், நாட்டில் தினசரி நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.
மேலும் இந்த வாரம் முதல் முறையாக புதிய வழக்குகள் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டின. சனிக்கிழமை மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியது.
நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்கும் முயற்சியில், ஆஸ்திரியா, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்கை பகுதிகளுக்கான பயணங்களுக்கு எதிராக ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், சமூக இடைவெளிகளை கடைபிடிக்கவும், பயணங்களை குறைக்கவும் ஜேர்மனியர்களுக்கு அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் மீண்டும் வலியுறுத்தினார்..
ஜேர்மனியர்கள் சமூக தொடர்புகளை குறைத்தால், இந்த வைரஸ் முன்வைக்கும் பாரிய சவாலை நாங்கள் அனைவரும் ஒன்றாக எதிர்கொள்வோம் என்று மெர்க்கல் அறிக்கையில் தெரிவித்தார்.