காவ்யா மாதவனுக்கு பல ஆண்களுடன் தொடர்பு? மஞ்சு வாரியர் என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in கிசுகிசு

நடிகர் திலீப்- காவ்யா மாதவன் திருமணம் குறித்து திலீப்பின் முன்னாள் மனைவியும் பிரபல நடிகையுமான மஞ்சு வாரியர் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்,

நடிகை மஞ்சு வாரியார் தனது கணவர் திலீப்பை விவாகரத்து செய்த பின்னர், அவருக்கு எதிராக எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காமல் மிகவும் நாகரீகமாக நடந்துகொண்டார்.

இந்நிலையில், நடிகர் திலீப், தான் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொள்வதற்கு, தனது மகள் மீனாட்சிதான் காரணம் என கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மஞ்சு வாரியர், திலீப் காவ்யாவை திருமணம் செய்ய எங்கள் மகள் மீனாட்சி கட்டாயப்படுத்தியதாக கூறுவதில் உண்மை இல்லை என்று மஞ்சு மலையாள பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

திலீப்பும், காவ்யாவும் திருமணம் செய்ய எங்கள் மகளையே பொய் சொல்ல வைத்துவிட்டார்கள். திலீப் எப்பொழுது நடிக்கிறார் என்றே தெரியவில்லை என மஞ்சு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் காவ்யா மாதவனின் முன்னாள் மாமியார், தனது மருமகள் நல்ல பெண் கிடையாது என்றும் அவருக்கும் பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது எனவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மலையாள உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments