மீன்களில் உள்ள ஆபத்துக்கள்: இந்த மீன்கள் மட்டும் வேண்டாமே

Report Print Printha in ஆரோக்கியம்

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் கடல் வாழ் உயிரனங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.

அதுவும் மீன்களில் பாலி அன்சாட்டுரேட்டேட் ஃபேட்டி ஆசிட்கள், செலினியம், அயோடின், பொட்டாசியம், விட்டமின் A, B12, D மற்றும் E ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

இவை அனைத்துமே நம் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் இதில் உள்ள ரசாயன கலப்படம் காரணமாக ஆரோக்கிய குறைபாடுகளும் உள்ளது.

மீன்கள் சாப்பிடுவது ஆபத்து ஏன்?

சில வகை மீன்களில் கன உலோகங்கள் காணப்படுகிறது. அதுவும் மார்லின், டுனா, சுறா போன்ற மீன்களில் அதிகமாக உள்ளது.

இவை சுற்றுச்சூழல் கேடுகளினால் உண்டாகும் விளைவாகும். கடலில் கலக்கும் ரசாயனக் கழிவுகள், கனரக உலோகங்கள், பெயிண்ட் போன்றவற்றினால் இந்த விளைவு உண்டாகிறது.

இவ்வாறு மீன்களின் உடலில் இந்த வகை மாற்றங்கள் உண்டாவதால், அந்த மீன்களை சாப்பிடும் போது, பெண்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மை குறைகிறது.

நாம் செய்யும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் கடலில் கிடைக்கும் மீன்களில் ஓட்டுண்ணிகள் வளர தொடங்கிவிடுகிறது. எப்படியெனில் வீடுகள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் இருந்து வரும் கழிவு நீரானது கடலில் கலப்பதே முக்கிய காரணமாகும்.

இவ்வாறு உள்ள மீன்களை முழுமையாக சமைக்காமல் சாப்பிடும் போது, அது வயிற்றுப்போக்கு, கல்லீரல் குறைபாடுகள், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது.

விப்ரியோ, சால்மோனெல்லா, ஷிகெல்லா, குளோஸ்டிரீடியம் போட்டினினம், ஸ்டாஃபிலோகோக்கஸ் ஆரியஸ் போன்ற இனங்களை சேர்ந்த பாக்டீரியாக்கள் கடல் வாழ் உயிரனங்களை மாசுபடுத்துகிறது.

இதனால் வயிற்றுப்போக்கு, தலைசுற்றல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

கடல் வாழ் உயிரினங்கள் நோரோவியஸ் மற்றும் ஹீபிடிடிஸ் A என்ற கல்லீரலை தாக்கும் வைரஸ்களால் தாக்கப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பாக காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, உடல்வலி போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

மனிதனால் உருவாக்கப்பட்ட நச்சுக்களை சாப்பிட்டும் கடல் வாழ் உயிரினங்களை நாம் சாப்பிடும் போது அது நமது உடலில் நச்சுக்களை சேர்த்து, கல்லீரலில் பாதிப்பு, ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை தூண்டிவிடும்.

குறிப்பு

சுறா மீன், கிங் பிஷ் போன்ற வகை மீன்களை ஒரு அளவுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதுவும் நன்றாக சமைக்கப்பட்ட மீன்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers