மலர்களும் அவற்றில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்களும்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

உலகில், உள்ள மலர்களில் 25 சதவீத மலர்களாவது மருத்துவ குணம் கொண்டிருப்பதாக மலர் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள்

பெண்கள் தலையில் பூச்சூடுவதனால் மனம் புத்துணர்ச்சி பெறுவதோடு அது உடல்நலத்துக்கும் நன்மை அளிக்கின்றது.

ரோஜா - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மல்லிகை - மனஅமைதிக்கு உதவுவதோடு, கண்களுக்கும் குளிர்ச்சியை அளிக்கும்.

செண்பகப்பூ - வாதத்தைக் குணப் படுத்துவதோடு, பார்வைத்திறனை மேம்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு.

பாதிரிப்பூ - செவிக் கோளாறுகளைச் சீர்படுத்துவதோடு, செரிமான சக்தியை மேம்படுத்தும், அதுமட்டுமல்லாமல் காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும் குண்மும் பாதிரிப்பூவிற்கு உள்ளது.

செம்பருத்தி - தலைமுடி தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்து, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு, பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட குறைபாடுகளையும் நீக்கும்.

வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கி, காசநோயைக் குணப்படுத்தும். சித்தகத்திப்பூ தலைவலியைப் போக்குவதோடு, மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் உதவி செய்யும்.

தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவுவதோடு உடல் சோர்வையும் நீக்கும்.

தாமரை - தலை எரிச்சல், தலைச்சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும், மனஉளைச்சலை நீக்கி அமைதியை கொடுக்கும், தூக்கமின்மையைப் போக்கி சீரான தூக்கத்தையும் அளிக்கும்.

கனகாம்பரம் - தலைவலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்