சிறுநீரக கற்களை கரைக்கும் வீட்டு வைத்தியம்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கும் நோயாக மாறி வருகிறது சிறுநீரக நோய்கள்.

நாம் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பேட், யூரியா, ஆக்சலேட் போன்ற தாது உப்புகள் உள்ளன.

உணவு செரிமானம் ஆன பின்னர் இவை சிறுநீரில் வெளியேறிவிடும், சில நேரங்களில் ரத்தத்தில் இவைகளின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரில் வெளியேறுவதற்கு சிரமப்படும்.

இதன்போது இவை ஒன்று திரண்டு சிறுநீர்ப் பாதையில் கற்களை உருவாக்குகின்றன.

சிறு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவில் கூட கற்கள் வளரும்.

சிறுநீரக பாதையில் உருவான இக்கற்கள் முதலில் சிறுநீர் ஒட்டத்தை தடை செய்யும், இதனால் சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும்.

இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

வீட்டு வைத்தியம்
 • சிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும்.
 • நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 • தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும்.
 • பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.
 • அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
 • வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.
 • வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து, புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
 • பிரஞ்சு பீன்ஸின் விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து அதை நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்து விட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்தவும், சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும்.
 • துளசி இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் சிறுநீரகக்கல் உடையும்.
 • மாதுளம் பழத்தின் விதையை பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளு சாருடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் கல் கரையும்.
 • அத்திப்பழத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers