மணலிக்கீரையில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

மணலிக்கீரையை உணவில் சேர்ப்பதனால் நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை அடியோடு அழிக்கின்றது. அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.வயிற்று பூச்சி அழியும்.

  • மணலிக்கீரையின் வேர், இலைகளை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் நீங்கும்.,வயிற்றுப்புண் குணமாகும்.

  • மணலிக்‌கீரையை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.

  • மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

  • மணலிக் கீரையுடன், மிளகு சேர்த்து கஷாயமாக்கி குடித்தால், மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குறையும்.

  • மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் மார்பில் ஏற்படும் சளி குறையும்.

  • மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்டால் தூக்கமின்மை நீங்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்