வாரம் ஒருமுறை இந்த மீனை சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

அசைவ உணவுகளில் மீனை பிடிக்கதாவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

சமைத்து உண்ணப்படும் மீன்களில் பல வகைகள் உண்டு. அதில் மிக முக்கியமான மீனாக கருதப்படுவது கானாங்கெளுத்தி மீன் ஆகும்.

இது உலகளவில் உண்ணப்படும் மீன் உணவுகளில் கானாங்கெளுத்தி மீனுக்கு என்றே தனிச்சிறப்பே உள்ளது

இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், புரோட்டீன் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

இது உடலுக்கு தேவையான பல நன்மைகளை வாரி வழங்குகின்றது.

அந்தவகையில் கானாங்கெளுத்தி மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

  • கானாங்கெளுத்தி மீனை அடிக்கடி உட்கொண்டு வர, இதய பிரச்சனைகளான பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும்.
  • உயர் இரத்த அழுத்தம் இருந்தால் கானாங்கெளுத்தி மீனை அடிக்கடி சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.
  • கானாங்கெளுத்தி மீன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
  • கானாங்கெளுத்தி மீனை உணவில் அடிக்கடி உட்கொண்டு வர, மூட்டு பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
  • கானாங்கெளுத்தி மீனில் உள்ள DHA அல்சைமர் அல்லது பர்கின்சன் நோயின் தாக்குதலைத் தடுக்கும்.
  • குடல் புற்றுநோயுடன் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கானாங்கெளுத்தியை உட்கொண்டால், வாழும் நாளை அதிகரிக்க முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers