பெண்கள் மென்ஸ்சுரல் கப் பயன்படுத்துவதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் ?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக மாதவிடாய் காலங்களில் கறை ஆடையின் மீது படிந்து விடுமே என்ற கவலை எல்லா பெண்களுக்குமே உண்டு.

சானிட்டரி நாப்கின் மற்றும் டேம்ப்போன் போன்றவைகளை பயன்படுத்தும் போது சில மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றி கொண்டே இருக்க வேண்டும். இதனால் வெளியில் செல்லும் பெண்களுக்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகுவதுண்டு.

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின், டேம்ப்போன் போன்றவற்றுள் மாதவிடாய் கப்களும் பிரபல்யமானது.

இது மாதவிடாய் கப்கள் மாதவிடாய் கப்கள் பெண்ணுறுப்பில் கச்சிதமாக பொருந்துமாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இது லேட்டெக்ஸ் ரப்பர் அல்லது சிலிகானால் செய்யப்படுகிறது. இது சிறியதாகவும், வளையக்கூடியதாகவும் காணப்படும்.

மேலும் அதிலுள்ள ஸ்பிரிங் போன்ற அமைப்பு இதை உறுதி செய்யும். அதனால் இரத்தம் கசிந்து விடுமோ என்ற பயம் ஏற்படாது

இது மாதவிடாய் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு பதிலாக சேமித்து வைக்கிறது.

ஒரு கப் வாங்கினால் அதை இரண்டரை ஆண்டுகள் வரை பயன்படத்தலாம் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி மாதம் மாதம் சானிட்டரி நாப்கின் வாங்கும் அவசியமும் இல்லை என்பதால் பொருளாதார ரீதியாகவும் இது நல்லது எனப்படுகின்றது.

மேலும் இதனை பயன்படுத்துவதனால் பல நன்மைகளும் உண்டு. தற்போது அந்த நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

மென்ஸ்சுரல் கப் பயன்படுத்துவதனால் என்ன நன்மைகள் ?
  • மாதவிடாய் கப்களை பலமுறை பயன்படுத்தலாம். இதனால் மாதம் தோறும் சானிட்டரி நாப்கின் வாங்கும் செலவு மிச்சமாகும்.
  • மாதவிடாய் கப்களை திரும்ப திரும்ப பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் திரும்ப பயன்படுத்தும் போது நன்றாக கழுவி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இது மிகவும் எளிதானது. வலிகள் அற்றது.
  • மாதவிடாய் கப்களை பயன்படுத்தும் போது குறைந்தபட்சம் 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
  • இது 5 மடங்கு அதிகமான அளவு மாதவிடாய் கப்களால் சேமித்து வைக்க முடியும். அதனால் அதிக உதிர போக்கு பிரச்சினை கொண்ட பெண்களுக்கு இது நன்மை அளிக்க கூடியதாக இருக்கும்.
  • மாதவிடாய் கப்களில் எந்த கெமிக்கலும் இந்த மாதவிடாய் கப்களில் கிடையாது. அதனால் இது உடலுக்கு எந்த கேடுகளையும் ஏற்படுத்தாது.
  • மாதவிடாய் கப்களை பயன்படுத்தும் போது இரத்தம் கப்களில் மட்டும் தான் விழும். இதனால் கறை பட்டு விடுமோ என்ற கவலை இந்த கப்களை பயன்படுத்தும் போது இருக்காது.
  • மாதவிடாய் கப்கள் பயன்படுத்தும் போது அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படாது.
  • கறைக்கு பயந்து இரவில் நாப்கின்கள் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்