இதயநோய் முதல் மலச்சிக்கல் வரை தடுக்க இந்த ஒரு பழம் போதுமே!

Report Print Kavitha in ஆரோக்கியம்
883Shares

பிளம்ஸ் மலைப்பகுதிகளில் அதிகமாக விளையும் பழங்களில் ஒன்றாகும்.

சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் இந்தப் பழம் இனிப்பு, புளிப்புச் சுவையுடன் இருக்கும்.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துகளும், வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் இ சத்துகளும் நிறைந்துள்ளன.

அதுமட்டுமின்றி பொட்டாசியம், ப்ளூரைடு, பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் தாமிரச்சத்துகள் கொண்டதாகவும் விளங்குகிறது.

அந்தவகையில் இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பிளம்ஸ் ஏராளமான நோய்களுக்கும் சரும பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கின்றது.

தற்போது பிளம்ஸ் சாப்பிடுவதனால் கிடைக்ககூடிய நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • பிளம்ஸ் சாப்பிடுபவர்களின் அணுக்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது என்றும், கொழுப்புச்சத்து குறைந்து இதயநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
  • பிளம்ஸில் வைட்டமின் சி சத்து இருப்பதனால் ஆரோக்கியமாக உடலை பராமரிப்பதை போலவே அழகைப் பராமரிக்க உதவும் குறிப்பாக சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும், கருப்பாக ஏற்பட்டிருக்கும் சின்னச்சின்ன திட்டுக்களையும் சரி செய்கிறது.
  • மனப்பதற்றம், மன அழுத்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாக பிளம்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
  • பிளம்சில் செறிந்திருக்கும் வைட்டமின் சி நோய்த்தொற்று மற்றும் நோய் அழற்சி ஆகியவற்றில் இருந்து நம்மைக் காக்க வேலையை செய்கிறது.
  • நார்ச்சத்து நிறைந்த கனி என்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள், குடல் பிரச்சினை, உபாதைகள் மற்றும் செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு பிளம்ஸ் பிரச்சினைகள் தீர்க்கும்.
  • உடலில் காயங்கள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொண்டு, விரைவில் ஆற்றும் மருந்தாக பிளம்சில் உள்ள மருத்துவ குணம் அமைகிறது.
  • இரும்புச்சத்து நிறைந்திருப்பதும், சீரான ரத்த ஓட்டமும் கூந்தல் வளர்ச்சிக்கான அடிப்படை மருத்துவக் காரணிகள். எனவே, பிளம்ஸ் கூந்தல் பிரச்சினைகளை நீக்கும் மருந்தாகவும் இருக்கிறது. முடி உதிர்வதையும் தடுக்கிறது.
  • பிளம்ஸ் எடுத்துக்கொள்பவர்களுக்கு முக்கியமாக இதில் உள்ள மினரல் சத்துகள், அதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்த அணுக்களுக்கு துணையாக இருப்பதுடன் ரத்தத்தை தூய்மைப்படுத்தும் பணியையும் செய்கிறது.
  • கர்ப்பிணியின் ஆரோக்கியம் காப்பதைப் போலவே கருவில் வளரும் குழந்தைக்கு கண் பார்வை, எலும்பு மற்றும் திசுக்களின் சிறப்பான உருவாக்கத்துக்கும் பிளம்ஸ் உதவுகிறது.
  • வைரஸ் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பிளம்ஸ் சாப்பிடுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்