அடிக்கடி தும்மல் வருதா? இதோ எளிய மருத்துவம்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

ஒருவருக்கு தும்மல் எப்போது வரும் என்று சொல்ல முடியாது, சிலர் அலுவலகத்திலோ மீட்டிங்கிலோ, முக்கியமான விசேஷங்களில் இருக்கும் போதோ தும்மல் வரலாம்.

இதனை பலரும் அடக்கி கொள்கின்றனர், பலர் தைலங்களை பயன்படுத்துகின்றனர், இப்படி செய்வது பல தீமைகளையே விளைவிக்கும்.

எனவே எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் தும்மலை சரிசெய்வது குறித்து பார்க்கலாம்.

பாகற்காய் இலை

ஒரு கைப்பிடி அளவுக்கு பாகற் இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர், பாகற் இலையில் நீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், இலைகளை வடிகட்டி தண்ணீரை தினமும் ஒருவேளை குடித்துவர தும்மல் கட்டுப்படும்.

சாமந்தி பூ

சாமந்தி பூவுடன், இஞ்சி சேர்த்து தேனீராக்கி குடிப்பதால், தும்மல் பிரச்னை சரியாகும்.

எலுமிச்சை இலை

ஒரு பாத்திரத்தில் சிறிது வேப்பிலை எடுக்கவும்.இதனுடன் எலுமிச்சை இலை, சிறிது மஞ்சள் சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து வரும் நிலையில், ஆவி பிடிப்பதால் தலைநீரேற்றம் குறைந்து தும்மல் கட்டுப்படும். இது, நெஞ்சக சளியை கரைத்து தும்மல், இருமலை போக்குவதாக அமைகிறது.

விரலி மஞ்சள்

விரலி மஞ்சளை விளக்கின் நெருப்பில் காட்டும்போது வரும் புகையை நுகர்வதால் தும்மல் விலகும். இது, தலையில் நீரேற்றத்தை போக்கும் மருந்தாக விளங்குகிறது. அலர்ஜி, வைரஸ் தொற்றால் ஏற்படும் தும்மலை போக்குகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்