சொத்தை பல்லை சரி செய்ய வேண்டுமா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in ஆரோக்கியம்

பல் சொத்தை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை ஆகும்.

பற்களின் மேலே படியும் காரை அல்லது உணவு படலத்தின் மீது நுண்ணுயிரிகள் உண்டாக்கும் அமிலம், பற்களை பாதித்து பல் சொத்தை உருவாக்குகிறது.

இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், பல் சொத்தை பாதிப்பு ஆழமாகி, வேரையும் பாதிக்கும். பல் வலி ஏற்படும். நாளடைவில் பல்லை அகற்றும் நிலை உருவாகும்.

இதனை தவிர்க்க எளிய இயற்கை முறைகளை கையாளுவதே சிறந்தது. தற்போது அவற்றை பார்ப்போம்.

Eliminar a Cárie nos Dentes
  • தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் சொத்தை பற்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
  • தினமும் இரவில் தூங்கும் போது 2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டன் துணியில் அந்த எண்ணெயை தொட்டு இரவில் தூங்கும் போது சொத்தை பற்கள் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சொத்தை பற்கள் விரைவில் குணமாகும்.
  • தினமும் காலை எழுந்தவுடன் வெதுவவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பற்கள் துவக்கும் முன் 1 நிமிடம் வாயி கொப்பிளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் மூன்று வேலை உணவு உட்கொள்ளும் முன் செய்து வந்தால் பற்களில் சொத்தையில் இருந்து விடுப்படலாம்.
  • 3-4 பூண்டு பற்கள் எடுத்து நன்றாக தட்டி அதனுடன் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அந்த கலவையை சொத்தை பற்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து நன்றாக அழுத்த வேண்டும். இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால் சொத்தைப் பற்களில் ஏற்படும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.
  • மஞ்சள் தூளை சொத்தை பல் உள்ள இடத்தில் வைத்து நன்றாக தேயித்து 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் சொத்தைப் பல் பிரச்சனை குணமாகும்.
  • வேப்பிலை சாறை சொத்தை பற்கள் மீது தேயித்து 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் காலை வேப்பங்குச்சி கொண்டு பல்துலக்கி வந்தாலும், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...