குடலை பாதுகாக்கும் நல்ல பக்டீரியாக்களை அதிகரிக்கும் உணவுகள்

Report Print Kabilan in ஆரோக்கியம்

உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம்.

ஒருவரது உடலில் பாக்டீரியாக்களின் அளவு குறைந்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, குடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமானது.

குடலில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் போது, குடலின் ஆரோக்கியமும் மேம்படும்.

புளிக்க வைக்கப்பட்ட உணவுகள்

புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். இந்த வகை உணவுகளில் லாக்டோபேசில்லி பாக்டீரியா அதிகம் உள்ளது.

இது வயிற்றில் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். யோகர்ட், கிமிச்சி, கொம்புச்சா போன்றவை சிறந்த புளிக்க வைக்கப்பட்ட உணவுகளாகும்.

பருப்பு வகைகள்

பீன்ஸ், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் உடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இவற்றில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது.

இவை குறிப்பிட்ட பாக்டீரியாக்களால் எளிதில் சீரணிக்கப்படலாம். எனவே நார்ச்சத்துக்கள் உணவுகளை அதிக உட்கொள்ள வேண்டும். மேலும் பீன்ஸ், பச்சை பட்டாணி, ப்ராக்கோலி, முழு தானியங்கள், ராஸ்ப்பெர்ரி, கொண்டக்கடலை ஆகியவையும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.

ப்ரீபயாடிக் உணவுகள்

இந்த வகை உணவுகளும் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இவற்றில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளதால், இவை எளிதில் செரிமானமாகாது. எனவே நமது உடல் இந்த உணவுகளை செரிமானம் செய்வதற்கு, சில அத்தியாவசிய பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து, உடலுக்கு ஆற்றலை வழங்கும்.

முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ப்ரீயாடிக் உணவுகள் ஆகும். இவை நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், உடல் பருமனுடன் இருப்பவர்கள் சந்திக்கும் வளர்சிதை மாற்ற கோளாறுகளை சரிசெய்ய உதவும்.

தாவர வகை டயட்

தாவர வகை டயட்டை மேற்கொள்பவர்களின் உடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளமான அளவில் உள்ளதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது.

இதற்கு காரணம் தாவர வகை உணவுப் பொருட்களில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான். மேலும், இந்த டயட்டை மேற்கொள்பவர்களுக்கு, கொலஸ்ட்ரால், உட்காயங்கள் மற்றும் உடல் எடை பிரச்சனை சற்று குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

பாலிஃபீனால் உணவுகள்

குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளமாக இல்லாவிட்டால், பாலிஃபீனால்களை சீரணிப்பது சற்று கடினம். எனவே, குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யத் தூண்டும் இந்த வகை உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பது போன்ற ஆரோக்கிய நன்மைகளை பாலிஃபீனால்கள் உணவுகள் வழங்கக்கூடியது.

ப்ராக்கோலி, வெங்காயம், ப்ளூபெர்ரி, க்ரீன் டீ, பாதாம், ரெட் ஒயின், டார்க் சாக்லேட் மற்றும் கொக்கோ போன்றவற்றில் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்