சர்க்கரை வியாதி உங்கள் வாழ் நாள் முழுவதும் வரமால் இருக்கனுமா? அடிக்கடி இவற்றை சாப்பிட்டால் போதும்.

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று 35 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், பல பல நோய்கள் நம்மில் வந்து ஒட்டிவிடுகின்றது. அதில் ஒன்று தான் சர்க்கரை நோய்.

இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும்.

வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.

அந்தவகையில் இதனை ஆரம்பத்திலே சரி செய்வது சிறந்ததாகும். தற்போது சர்க்கரை நோயை வாழ் நாள் முழுவதும் வரமால் இருக்க சில இயற்கை முறைகளை எப்படி இங்கு பார்ப்போம்.

  • சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் 3 முதல் 6 கிராம் வரை லவங்கப்பட்டை பொடியை உபயோகிப்பது நல்லது.

  • ​தருகல்தி மூலிகையின் வேரை சிறிதளவு எடுத்து அரைத்து பொடியாக்கி அதை தினமும் இரண்டு வேளை பாலில் கலந்து குடித்து வந்தால், இந்த மூலிகையின் சக்தியானது உடலில் உள்ள இன்சுலினை இரத்தத்தில் சுரக்க செய்யும். தினமும் இரண்டு வேளை நாம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறையும்.

  • ​சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் இரண்டு கப் மஞ்சள் டீ குடித்து வந்தால் மிகவும் நல்லது. அல்லது ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூளைக் கலக்கி அதை சுட வைத்து தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது என்று குறிப்பிடுகின்றனர்.

  • தினமும் சிறிதளவு நமக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணையை எடுத்துக் கொள்வதினால் சர்க்கரை வியாதியை குறைக்க கூடிய வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.

  • நாவல் பழ விதைகளை நிழலில் நன்கு உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு, அதை பாலில் கலந்து குடித்து வரலாம். அதேபோல சூப் போன்றவற்றிலும் இந்த பொடியை தூவிக் கொள்ளலாம்.

  • இரண்டு நாளுக்கு முன்பே வெந்தயத்தை ஊற வைத்து, முளைகட்ட வைத்து விட வேண்டும். ஒரு இன்ச் அளவுக்கு முளைகட்டிய பின் சாப்பிட்டால், வெந்தயம் இனிப்பாக இருக்கும். கொஞ்சம் கூட கசப்புத் தன்மையே இருக்காது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்