நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் செய்யக்கூடாத தவறுகள்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களே கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்கள் எளிதில் தாக்குகின்றன என சொல்லப்படுகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைய பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நாம் செய்யும் கவனக்குறைவான சில விஷயங்கள் அல்லது தவறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்திவிடும்.

அந்தவகையில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும் 6 தவறுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • பாக்கெட்டுகள், டப்பாக்களில் அடைக்கப்பட்டு வரும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவு பழக்கம் நீண்ட நாள்கள் தொடரும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நோய்கள் எளிதில் தொற்றிக்கொள்ளும்.
  • மனச்சோர்வால் பாதிக்கப்படும்போது கார்ட்டிசால் மற்றும் அட்ரீனலின் ஹார்மோன்கள் வெளியாகும். அவை உடலை நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்றும் லிம்போசைட் வெள்ளையணுக்களின் அளவைக் குறைக்கும். இதனால் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும் ஆற்றலை உடல் இழந்துவிடும். எனவே இதிலிருந்து வெளிவருவது சிறந்தது.
  • ஒருநாளைக்கு 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் இல்லாவிட்டால், உடலில் போதிய சைட்டோகின்கள் உற்பத்தியாகாது. அப்போது உடலால் பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகத் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே ஆழ்ந்த தூக்கம் முக்கியம்.
  • அதிக குடிப்பழக்கதினை கைவிட வேண்டும். ஏனெனில் இதனால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலீனமடைந்து, நோய்கள் தாக்குவதற்கு ஏதுவாக உடல் மாறிவிடும்.
  • உடற்பயிற்சியை ஒதுக்கினால் எளிதில் நோய்த்தொற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகின்றது. ஏனெனில் உடற்பயிற்சியின்போது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், பாக்டீரியா, நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும்.
  • புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும். ஏனெனில் புகைப்பழக்கம் ரத்தத்திலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளின் அளவைக் குறைக்கும். இது சுவாச மண்டலத்தில் நிமோனியா முதல் மூச்சுக்குழாய் அலர்ஜி வரையான தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...