தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டு பாருங்க.... உடம்பில் மாற்றங்கள் நிகழுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக உணவின் மனத்தை அதிகரிக்கவும், சுவையை கூட்டுவதற்கும் தினமும் சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தப்படும் ஓர் மூலிகை தான் கறிவேப்பிலை.

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது.

கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதற்கு தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட்டாலே போதும் உடலில் உள்ள பாதி பிரச்சினைகள் பறந்து ஓடிவிடும்.

அந்தவகையில் தற்போது தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

sanjeevkapoor

  • கறிவேப்பிலை ஆனது உங்கள் இருதயத்தை சீராக இருக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது

  • கறிவேப்பிலையில் அதிகமான இரும்புச் சத்தும் போலிக் ஆசிட்டும் இருப்பதனால் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் அடியோடு குறைந்து விடும். எனவே முடிந்தவரை நம் உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது.

  • கறிவேப்பிலை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குறைந்து விடும். ஏனெனில் இதில் உள்ள நார்ச் சத்தானது சர்க்கரையின் அளவு மிகவும் சீராக வைத்திருக்கிறது. நார்ச்சத்து அதிகம் கிடைக்கும் பொழுது நார்சத்து என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்பொழுதுமே சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

  • கறிவேப்பிலை உடலில் உள்ள கொழுப்பு சத்தை உறிஞ்சி விடுகிறது. இது கொழுப்பு சத்தை குறைக்கும் பொழுது உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கப்படுகிறது. எனவே கொழுப்பு சத்தை உறிஞ்சி விடுகிறது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் சீராக்குகிறது.

  • கறிவேப்பிலையில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. எனவே இது கொலஸ்ட்ரால் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது.

  • நாம் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் நரை பிரச்சனை வருவது முற்றிலும் குறைந்து விடும்.

  • செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை சரியாகும்.

  • கருவேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கல்லீரல்களில் தங்கி இருக்கும் தீங்கு விளைவிக்க கூடிய நச்சுகளை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்