நாடி நரம்புகள் உறுதியாக இருக்கனுமா? இந்த உணவுகளை எடுத்து கொண்டால் போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்
417Shares

பொதுவாக நம் உடலையும் மனதையும் கட்டுப்படுத்த கூடிய மிக முக்கியமான அமைப்பு தான் நரம்பு மண்டலம்.

உடலை சரியாக பராமரிப்பதற்கும் ஆரோக்கியமாக வைப்பதற்கும் நரம்பு மண்டலம் மிக அவசியமான ஒன்றாகும்.

எனவே, நரம்பு மண்டலத்திற்கு ஊட்டச்சத்து அளிக்க கூடிய உணவுகளை கட்டாயமாக உண்ண வேண்டும்.

அதற்கு புரோட்டின், நல்ல கொழுப்பு, வைட்டமின் உணவுகளை அவசியம் மேற்கொள்வதன் மூலம் நம்மால் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க முடியும்.

இந்த சத்துகள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவதன் மூலம் நரம்பு சார்ந்த பல பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

அந்தவகையில் தற்போது நாடி நரம்புகளையும் உறுதியாக வைத்திருக்கும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • அவகேடா பழத்தில் இருக்கும் வைட்டமின் டி மற்றும் கே ஆகியவை நரம்பு மண்டலத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதால் இந்த பழமானது சிறந்த உணவாகும். மரபு சார்ந்த நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க கூடிய நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதற்கு இந்த பழம் நல்லது.
  • மாட்டிலிருந்து உருவாகும் பால் மற்றும் அது சார்ந்த பொருட்கள் நரம்பு மண்டலத்திற்கு ஊட்டச்சத்தினை அளிக்கக்கூடியதாகும். இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், ஸ்ட்ரோக் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கு பால் அவசியமான ஒன்றாகும்.
  • பாதாம், முந்திரிப் பருப்பு, வால்நட் போன்ற நட்ஸ் வகைகள் நரம்பு மண்டலத்திற்கு ஊட்டச்சத்து அளிக்க கூடிய மிக முக்கியமான உணவுகளின் வரிசைப்பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இதில் இருக்கும் மெக்னீசியம் தாது உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
  • அத்திப்பழம் சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • வாழைப்பழத்தில் அதிகமாக காணப்படும் பொட்டாசியம் சத்தால் நமது மூளைக்கு அதிகமான பயன் இருக்கிறது. இது நரம்பு மண்டலத்திற்கு அதிகமாக ஆதரவு அளிக்கக் கூடிய உணவாகும்.
  • ப்ளூபெர்ரியில் இருக்கும் நார்ச்சத்துகளால் நமது நோய்களில் இருந்து பாதுகாப்பதுடன் நரம்பு மண்டலத்திற்கு மிக முக்கியமான உணவு பட்டியலில் இடம் பெறுகிறது.
  • கீரைகளில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை நம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தினை அதிகரித்தல் செரிமான பிரச்சனையில் இருந்து பாதுகாத்தல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்தல் போன்றவற்றை செய்கின்றன.
  • கிழங்கு வகைகள் உடலில் ஏற்படும் ரத்த பிரச்சனைகள் மற்றும் வீக்கம் ஆகியவற்றில் இருந்து குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. பூண்டு மூளைக்கு அதிக ஆரோக்கியத்தினை உருவாக்கக் கூடிய மிக முக்கியமான உணவாகும்.
  • கிரீன் டீயை தொடர்ந்து சாப்பிட்டால் மறதி நோய் தீரும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலில் தேவையற்ற கட்டிகள் உருவாவதைத் தடுக்கும். கிரீன் டீ குடிப்பதால் மன அழுத்தம் விலகும். உடல் எடையைக் குறைக்கவும் நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சார்ந்த நோய்கள் வராமலும் இது பாதுக்காக்கிறது. எப்போதும் உணவு சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து கிரீன் டீ குடிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்