வீட்டில் செல்வம் பெருக காலையில் இதை செய்தால் போதும்

Report Print Printha in வீடு - தோட்டம்
1176Shares
1176Shares
ibctamil.com

அதிகாலை நேரம் என்பது காலை 3-5 மணி வரை ஆகும். இந்த காலத்திற்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். ஏனெனில் இந்த நேரத்தில் தான் காற்றில் ஓசோன் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே அந்த நேரத்தில் உறக்கத்தை விட்டு எழுவதால் அவர்களின் லட்சியத்தை அடைய முடியும். அதனால் அவர்களின் செல்வம் பெருகும் என்று கூறுகின்றனர்.

அதோடு மட்டுமில்லாமல் அதிகாலையில் உறக்கத்தை விட்டு எழுவதால் உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு அற்புத நன்மைகளை பெறலாம்.

அதிகாலை விழிப்பதால் ஏற்படும் அற்புதம்?
  • அதிகாலை உறக்கத்தை விட்டு எழுவதால் மனம் இலகி, புத்துணர்வு அடையும், ரத்த ஓட்டம் சீராகி, உடலும் மனமும் வலுவாக இருக்கும்.
  • அதிகாலை சூரிய ஒளியில் நம் உடல் படுப் போது, நமது மூளையில் செயல்திறன் அதிகரித்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • நாம் உயிர்வாழத் தேவையான காற்று, நமது பிராணனைக் காக்கும் பிராண வாயுவைத் தருகிறது. இது நம் உடலில் நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • அதிகாலையில் நடப்பது, ஓடுவது போன்ற பயிற்சிகளை செய்தால், அது நம் உடலின் ஆற்றலை சீராக்கி, புத்துணர்வை அதிகமாக்கும்.
  • காலையில் எழுவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அதோடு ஒரு செயல்களில் ஈடுபடும் போது, அந்த செயல், மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்