சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலை முயற்சி: உறவினர்கள் நெருக்கடியா?

Report Print Nithya Nithya in இந்தியா
சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலை முயற்சி: உறவினர்கள் நெருக்கடியா?
922Shares
922Shares
lankasrimarket.com

தலித் இளைஞனை காதல் திருமணம் செய்துக்கொண்ட சங்கரின் மனைவி கவுசல்யா இன்று திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்ற தலித் இளைஞர், பழனியை சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த கவுசல்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு கவுசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மார்ச் 13ம் தேதி உடுமலையில் உள்ள ஜவுளிக்கடைக்கு வந்த சங்கரும் கவுசல்யாவும் பட்டப்பகலில் நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் ஆணவ கொலைவெறி கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் வெட்டுப்பட்ட கவுசல்யா, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் சங்கரின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். சங்கர் படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த உடுமலைபேட்டை பொலீசார் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட் சுமி, அவரது உறவினர் மதன், மதனின் கூட்டாளிகளான பழநி- மணிகண்டன், திண்டுக்கல்- ஜெகதீசன், அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார், பட்டிவீரன் பட்டி- மணிகண்டன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, உறவினர் மதன் ஆகியோர் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.கலையரசன் முன் இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சாட்சிகளை கலைத்து விடும் சூழல் உள்ளது. சமூகத்தில் பல்வேறு சாதிப் பிரிவுகள் உள்ளன. இவற்றால் சமூகத்தில் ஒரு விதத் தாக்கம் ஏற்பட்டு வருகின்றன. சமூக நலனைக் கருத்தில் கொண்டு, இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

இந்நிலையில், உடுமலைப்பேட்டையில் சங்கரின் பெற்றோருடன் வசித்து வந்த கவுசல்யா இன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்திய நிலையில், மன உளைச்சலே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments