தேவாங்கு போல இருப்பதாக கூறியதால் சுவாதியின் வாயை குறிவைத்து வெட்டினேன்: ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
தேவாங்கு போல இருப்பதாக கூறியதால் சுவாதியின் வாயை குறிவைத்து வெட்டினேன்: ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமாரிடம் இன்று அதிகாலை பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ராம்குமார் கூறியதாவது, கடந்த டிசம்பரில் சுவாதியிடம் காதலை தெரிவித்ததாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும் கூறிய அவர் தன் முகம் தேவாங்கு போல இருப்பதாக சுவாதி கூறியதால் மிகுந்த ஆத்திரமடைந்தேன்.

மேலும் தேவாங்கு போல இருப்பதாக விமர்சித்ததால் சுவாதியின் வாயை குறிவைத்து வெட்டியதாக ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, செங்கோட்டை நீதிபதி முன் ராம்குமாரை ஆஜர்படுத்திய பின் இன்று இரவு அவரை சென்னை அழைத்து வர பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

நெல்லை மருத்துவமனையில் வருவாய், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments