ஜெயலலிதா குறித்த ஆளுநர் மாளிகையின் அறிக்கை வெளியானது

Report Print Aravinth in இந்தியா

ஆளுநர் முதல்வர் சிகிச்சை பெறும் வார்டுவரை சென்று நலம் விசாரித்ததாகவும், ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இந்நிலையில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகிக்கும் வித்யாசாகர் ராவ், கடந்த 1 ஆம் திகதி அப்பல்லோ மருத்துவமனை சென்று முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து, இன்று மீண்டும் முதல்வர் உடல்நிலை குறித்து அறிவதற்காக அப்பல்லோ மருத்துவமனை சென்றுள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக பொறுப்பு ஆளுநர் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிய அப்பல்லோ சென்றார்.

அங்கு அப்பல்லோ மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் பிரதாப் சி ரெட்டி முதல்வர் உடல்நிலை குறித்து ஆளுநருக்கு விளக்கமளித்துள்ளார்.

சுவாச நிபுணர்கள், இதய நிபுணர்கள், அவசர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய ஒரு பெரும் மருத்துவ குழு முதல்வருக்கு சிகிச்சையளித்து வருவதாக பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சுவாச உதவி, பிசியோதெரபி சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை தொடர்ந்து முதல்வருக்கு அளித்து வருவதாகவும் முதல்வர் வேகமாக குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் சிகிச்சை பெறும் வார்டுவரை ஆளுநர் சென்று நலம் விசாரிக்கும் பொழுது லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் ராமமோகன ராவ், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments