தமிழக அரசின் நிலை என்ன? மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய ஆளுநர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழக ஆளுநரான வித்யாசாகர் ராவை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொருளாளர் சசிகலா ஆகிய இருவரும் தனித்தனியாக சந்தித்து, முதல்வர் பதவியில் அமர்வது குறித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் உள்த்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ஆளுநர் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உரிய ஆலோசனைக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments