இயக்குனர் கவுதமன் திடீர் கைது!

Report Print Raju Raju in இந்தியா

சென்னை கத்திபாராவில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் இயக்குனர் கவுதமன் கைது செய்ய பட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 30 நாட்களாக தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக சென்னையில் முக்கிய இடமான கத்திபாராவில் இயக்குனர் கவுதமன் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது.

முக்கிய சாலையில் போராட்டம் நடைபெறுவதால் சென்னை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கவுதமனையும் அவருடம் போராடியவர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்

பின்னர் கவுதமன் செய்தியாளர்களிடம் பேசும் போது, நடிகர்களை சந்திக்கும் மோடி விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்காமல் நாங்கள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் இயக்குநர் கவுதமன் எச்சரித்துள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments