மதுக்கடையை எதிர்த்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலையா?

Report Print Santhan in இந்தியா

மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்ணை மர்ம கும்பல் ஒன்று மது பாட்டிலால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் பணக்காடி கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றகோரி மனு எழுதிய அப்பகுதி சமூக ஆர்வலர் செல்வி, மனுவில் ஊரார் பலரிடம் கையெழுத்து வாங்கினார்.

இதை நேற்று நடைபெறும் மனு நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த விஜய் என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் செல்வியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் செல்வி இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து பொலிசாரும் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வரச்சொல்லி சென்றுவிட்டனர்.

பொலிசார் சென்ற அடுத்த சிறிது நேரத்தில், செல்வியை வழிமறித்த மர்ம நபர்கள், அவரை தாக்க முற்பட்டனர். தப்பியோடிய செல்வியின் முதுகில் மதுபாட்டிலை உடைத்து குத்தினர்.

பலத்த காயமடைந்த செல்வி, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments