குடியால் இறந்த தந்தைக்கு அஞ்சலி: உருக வைக்கும் வாசகம்

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் மதுப்பழக்கத்தால் உயிரிழந்த தந்தைக்கு அவரது குழந்தைகளும், குடும்பத்தினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்து உள்ள மேலநாகையைச் சேர்ந்த 39 வயதான சசி என்கிற சாமிநாதன் மதுப் பழக்கத்தால் கடந்த ஆண்டு மே மாதம் 8ம் திகதி உயிரிழந்துள்ளார்.

கார் டிரைவரான சாமிநாதனுக்கு தவமணி என்ற மனைவி, பாலகஸ்தூரி(வயது 10), பிரீத்தி(வயது 8) என்ற குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சாமிநாதனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அப்பகுதியில் நினைவஞ்சலி பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அந்த பேனரில் மது இல்லை என்றால் மன்னாதி மன்னன் எங்கள் தந்தை என்று அவர்களது குழந்தைகள் கூறுவது போல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனரில் உள்ள வாசகங்களை படித்த அக்கம்பக்கத்தினர் கண் கலங்கியபடி சென்றுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments