பெல்ட்டுக்கு பதில் பாவாடை நாடா கட்டிக்கோங்க! வருத்தெடுத்த நடிகை குஷ்பு

Report Print Santhan in இந்தியா

மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை எருமை, பசு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்று தடைவிதித்தது.

இதற்கு நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

இதைத் தாண்டி கேரளா மாநிலத்தில் இந்த விவகாரத்தால் தனி திராவிடம் கோரி தனி ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு இதுகுறித்து கூறுகையில், மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை அரசு கூற வேண்டாம்.

என்னுடைய தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும், மத்திய அரசு அல்ல.

இதை மட்டும் உண்ண வேண்டும், இதை மட்டும் உடுத்த வேண்டும், இதை மட்டும் தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.

தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதால் அதையும் தடை செய்தால் பாஜக-வினர் யாரும் உண்ணாமல் இருக்க முடியுமா, தோல் செருப்புகள் அணியாமல் வெறுங்காலில் நடக்க முடியுமா, பேண்ட் பெல்ட்டுக்கு பதில் நாடாவை கட்டிக் கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments