ஆட்சி நீடிக்க வேண்டும்: நடிகர் கருணாஸ் கவலை

Report Print Deepthi Deepthi in இந்தியா

அதிமுக ஆட்சி சரியாக நடந்து கொண்டிருக்கிறது, இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என எம்எல்வும், நடிகருமான கருணாஸ் கூறியுள்ளார்.

முதல்வரை சந்தித்து எங்கள் தொகுதிப் பிரச்சனை குறித்து பேசினேன்.தொகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக முதல்வரிடம் பேசினேன்.

தமிழகத்தில் தற்போது ஆட்சி நன்றாக இருக்கிறது. இது தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

நிலையான ஆட்சி நடக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எந்த அணியில் அதிமுகவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்த அணிக்கு தான் என் ஆதரவு இருக்கும்.

நான் முதல் முதலாக எம்எல்ஏ ஆகியிருக்கிறேன். ஏதாவது தொகுதிக்கு செய்ய வேண்டும். அதற்காக இந்த ஆட்சி நடக்க வேண்டும். இந்த அரசு இருந்தால்தான் தொகுதிக்கு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments