நட்சத்திரமாய் ஜொலித்த நடிகை பணமின்றி தவிக்கும் பரிதாபம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
2377Shares
2377Shares
lankasrimarket.com

400க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த கேரள நடிகை தொடுபுழா வசந்தி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பதாக பேட்டி அளித்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

புகழின் உச்சத்தில் இருந்து வசந்திக்கு சமீபத்தில் கால் முறிவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொண்டார்.

மேலும், இவருக்கு தொண்டை புற்றுநோய் வேறு இருந்த காரணத்தால் ரூ.4 லட்சம் செலவழித்து சிகிச்சை செய்துகொண்டார்.

இதனைத்தொடர்ந்து கீமோதெரபி சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால் அதற்கு பணம் இன்றி தவித்து வருகிறார்.

அந்த சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சொந்தவீட்டில் வசித்து வரும் இவர், அந்த வீட்டை தவிர தன்னிடம் வேறு எதுவும் இல்லை என்றும் யாரேனும் தனக்கு பண உதவி செய்ய வேண்டும் என உதவி கேட்டுள்ளார்.

தொண்டை புற்றுநோயின் காரணமாக இவரால் சாப்பிட முடியாது என்பதால் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலமே உணவு வழங்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்