பெரிய ஆளா வருவீங்க: மக்களை ஏமாற்றிய மோசடி சாமியார் கைது

Report Print Fathima Fathima in இந்தியா

வங்கிகளில் கடன் பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி சாமியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மவுலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரிகரன்(வயது 60), மனைவி இறந்துவிட்ட நிலையில், வீட்டிலேயே குறி சொல்லும் வேலை பார்த்து வருகிறார்.

இவரிடம் குறி கேட்க வருபவர்களிடம் சாமர்த்தியமாக பேசி வங்கியில் லோன் வாங்கி தருவதாக உறுதி அளிப்பதுடன், பெரிய ஆளா வருவீங்க என ஆசை காட்டுவாராம்.

இவரது பேச்சில் மயங்கும் நபர்கள் லட்சக்கணக்கில் கமிஷன் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

சென்னை பெரியமேட்டில் தோல் கம்பெனி நடத்தி வரும் பயாஸ் என்பவர் அளித்த புகாரின் பேர் அரிகரனிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

ரூ.40 லட்சம் வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சத்தை லஞ்சமாக பெற்றது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து பலரும் புகார் அளிக்க 2 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று மாலை அரிகரனை கைது செய்த பொலிசார் வீட்டில் சோதனை நடத்தினர்.

அவர் பயன்படுத்திய சொகுசு காரையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers