சசிகலா- நடராஜன் திருமணத்தை நடத்தி வைத்த கருணாநிதி: வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

நடராஜன் - சசிகலா தம்பதியின் திருமணத்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி தலைமையேற்று நடத்திய புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

நடராஜன் தமிழக அரசின் பொது துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். நடராஜனுக்கும், சசிகலாவுக்கும் கடந்த 1975-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தான் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

கருணாநிதி நடராஜனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்