சிறுமி ஆஷிபாவின் புகைப்படத்தை எப்படி நீங்கள் வெளியிடலாம்: நீதிமன்றம் காட்டம்

Report Print Santhan in இந்தியா

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் இறந்த சிறுமி ஆஷிபாவின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஆஷிபா என்ற 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த சிறுமிக்காக லண்டன் பாராளுமன்றத்திலும் குரல் ஒலித்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கதுவா சம்பவத்தில் தொடர்புடைய சிறுமியின் பெயரையும், புகைப்படத்தையும் வெளியிட்ட ஊடகங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அடையாளத்தை வெளிப்படுத்திய ஊடகங்கள் மன்னிப்புக் கேட்கும்படி உத்தரவிட்டது.

அதோடு, சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்கள் ஒவ்வொன்றும் தலா 10 லட்சம் ரூபாயை ஜம்மு காஷ்மீர் நிவாரண நிதியில் அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்கள், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற சட்டம் தெரிந்தும், தங்களது அறியாமையால் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டதாக கூறி மன்னிப்பு கோரின.

மேலும் பாலியல் பலாத்கார சம்பவங்களில் பாதிக்கப்படுவோரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது அரசியலமைப்புச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதையும், அதையும் மீறினால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், பொருள் உணர்த்தும் பெயரால் குறிப்பிடலாம் என்றும் ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்