தியேட்டரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - தாயார் உடந்தை: விசாரணையில் அம்பலம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தியேட்டரில் சினிமா பார்க்கும் போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய தொழிலதிபர் மொய்தீன் குட்டி என்பவரை கண்காணிப்பு கமெரா காட்சிகளின் அடிப்படையில் சனிக்கிழமையே பொலிசார் கைது செய்திருந்தனர்.

மொய்தீன் குட்டி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் இருவர் மீதும் Pocso சட்டத்தின்படி பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தாயாரின் அனுமதியுடனையே குறித்த பாலியல் துஷ்பிரயோகம் அரங்கேறியுள்ளதாக கேரள மகளிர் ஆணையத்தின் தலைவர் ஜோசபைன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரின் கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை தியேட்டர் நிர்வாகிகள் போட்டுப்பார்த்தனர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.

அதில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயதுக்காரர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த காட்சி பதிவாகி இருந்தது.

படம் தொடங்கியதில் இருந்து அவர் அந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தார். அந்த சிறுமி இதுதொடர்பில் தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூறினார்.

ஆனால் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் படம் பார்ப்பதில் தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

குறித்த சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில் சிறுமிகள் பாதுகாப்பு அமைப்பு மூலம் பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் பொலிசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் சங்கரன்குளம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சிறுமிக்கு தியேட்டரில் பாலியல் கொடுமை நடந்தது பற்றி உரிய விசாரணை நடத்தாத பொலிசார் மீதும்,

அதனை தடுக்காத அந்த சிறுமியுடன் வந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய தலைவர் மோகன்தாஸ் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers